முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தநிலையில், நீண்ட வரிசை காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.
இதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு வழிபாடு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.