ஷூ கடையில் கோடிக்கணக்கில் சுருட்டிய பொறுப்பாளர்கள் - கணக்கை பார்த்ததும் அதிர்ந்த ஓனர்
ஷூ கடையில் கோடிக்கணக்கில் சுருட்டிய பொறுப்பாளர்கள் - கணக்கை பார்த்ததும் அதிர்ந்த ஓனர்
ஈரோடு மாவட்டம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஞானபால். இவர் தோல் பதனிடுதல் மற்றும் வெளிநாடுகளுக்கு ஷூ ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை ஈரோட்டில் நடத்தி வருகிறார். இந்த நிலையில், ராணிப்பேட்டையில் கிளை ஒன்று துவங்கப்பட்டது. புதிய கிளை நிறுவனமானது, முருகன், கோபி, ஜமுனா உள்ளிட்ட 5 பேர்களின் கீழ் இயங்கி வந்தது. ஞானபாலுக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், கிளை நிறுவனத்தை சரியாக கவனிக்க முடியவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட முருகன், கோபி, ஜமுனா உள்ளிட்ட 5 பேரும் வேறு ஒரு பெயரில் வெளிநாடுகளுக்கு ஷூ ஏற்றுமதி செய்து வந்தனர். சந்தேகமடைந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்த போத, 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது ஞானபாலுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 5 பேர் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நிறுவன உரிமையாளர் ஞானபால், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஞானபால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்யும்படி காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.