`ரூ.1.5 கோடி வழிப்பறி' - `ரூ.2.5 லட்சம் என புகார்' - குழம்பி போன காவல்துறை

Update: 2024-04-03 14:42 GMT

`ரூ.1.5 கோடி வழிப்பறி' - `ரூ.2.5 லட்சம் என புகார்' - குழம்பி போன காவல்துறை

தனியார் கல்லூரியில் மேலாளராக உள்ள வினோத்குமார், தனது இருசக்கர வாகனத்தில் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை கொண்டு சென்றுள்ளார். சென்னை மயிலாப்பூர் அருகே சென்ற அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட வினோத்குமார், தான் வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறியுள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் வினோத்குமார் கொடுத்துள்ள எழுத்து பூர்வமான புகாரில் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையே மர்ம நபர்கள் வழிப்பறி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் குழப்பம் அடைந்த போலீசார் வினோத்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்