திடீரென மண்ணுக்குள் புதைந்த கட்டிடம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள் - பரபரப்பில் நீலகிரி

Update: 2024-08-02 13:32 GMT

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூடலூர் கோக்கால் மலை பாங்கான பகுதியில் பத்து வீடுகள் மற்றும் கட்டிடம் மண்ணில் புதைந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு கூடலூரில் பெய்த கன மழையில் அந்த பகுதியில் பத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் அங்குள்ள முதியோர் காப்பகத்தில் சுவர்கள் மற்றும் தரைகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்தன. இந்நிலையில், தற்போது அங்குள்ள கட்டிடங்கள் மண்ணில் புதைந்து வருகின்றன. சுமார் 7 அடி ஆழத்திற்கு முதியோர் காப்பக கட்டிடம் புதைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து இன்று இந்திய நிலத்தியல் துறை முதன்மை ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் தலைமையிலான குழு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.

Tags:    

மேலும் செய்திகள்