`நடுங்க வைக்கும் குரங்கு அம்மை' - எப்படி தப்பிப்பது? வெளியான முக்கிய தகவல்கள்

Update: 2024-08-16 11:00 GMT

தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகளிடம் இருந்து பரவலாம். தோலில் அரிப்பு ஏற்படுவது, சீழ், 2 முதல் 4 வாரங்கள் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு ஆகியவை தொற்று அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனையில் தொற்றை உறுதி செய்யலாம் எனவும், பாதிக்கப்பட்டவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் இருப்பது மற்றும் தடுப்பூசி வாயிலாகவும் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்த திரும்பிய எந்த வயதினராக இருந்தாலும் அறிகுறி இருந்தால் அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வைரஸ் தொற்று அறிகுறியுடன் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை மாவட்ட சுகாதார அலுவலர் உறுதி செய்ய வேண்டும் எனவும், தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். சென்னை SPHL மருத்துவமனைக்கு மாதிரிகளை அனுப்பி சோதனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுககு சோதனை செய்ய வேண்டும் . பாதிப்பு இருக்கும் நாட்டில் இருந்து விமான நிலையம், துறைமுகங்களில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்