சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, மாடுபிடி வீரரான மாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் ஜல்லிக்கட்டு காளையை பரிசளித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. பல ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாடுபிடி வீரரான விஜயகுமார் என்பவருக்கும், காவியாவிற்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகனுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, காளையுடன், சண்டைகிடா, நாட்டு நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றையும் வழங்கி மணப்பெண் வீட்டார் நெகிழ வைத்துள்ளனர்.