"கோவையில் கள்ளச்சாராயம் என்பதே இல்லை" - காவல் ஆணையாளர் பெருமிதம்

Update: 2024-06-21 13:10 GMT

"கோவையில் கள்ளச்சாராயம் என்பதே இல்லை" - காவல் ஆணையாளர் பெருமிதம்

கோவை மாநகரைப் பொறுத்த வரை கள்ளச்சாராயம் என்பது கிடையாது. இருந்த போதும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் காவலர்கள் வீட்டு கடன் பெறும் மூன்று நாள் கண்காட்சி ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை ​தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையாளர் இதனை தெரிவித்தார். மேலும், கோவையில் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, விதிமுறை மீறல்களில் ஈடுபடக்கூடிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்