ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் தேவிகலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்ற இளைஞருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் சந்திரலிங்கம் மனைவி தேவிகலாவை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தேவிகலா வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த லிங்கராஜ், தேவிகலாவை சராமரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார். தகவல் அறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் போலீசார், உயிரிழந்த தேவிகலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான லிங்கராஜை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருச்செந்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். அப்போது, தன்னை தேவிகலாவின் கணவர் அடிக்கடி மிரட்டியதாலும், தன்னுடன் பேசுவதை தேவிகலா தவிர்த்ததாலும், தேவிகலாவை கொலை செய்ததாக போலீசாரிடம் லிங்கராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.