9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை.. தந்தையான 10ம் வகுப்பு மாணவன் - தஞ்சையில் அதிர்ச்சி

Update: 2024-11-27 01:52 GMT

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வயிற்று வலி காரணமாக 9ம் வகுப்பு மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வேளையில், சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, அதே பகுதியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை காதலிப்பதாகவும், குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், சிறுமியை சீரழித்த 10 ஆம் வகுப்பு மாணவனான 15 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். சிறுவனால் சிறுமி கர்ப்பமடைந்து குழந்தை பெற்ற சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்