குறுக்க இந்த கௌஷிக் வந்தா.. சாலையை மறித்து Family-யுடன் அட்டகாசம் - அரண்டு நின்ற பொதுமக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கொள்ளேகால் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது... மாவள்ளம் பிரிவு என்ற இடத்தில் காட்டு யானைகள் சாலையின் நடுவில் உலா வந்த நிலையில், அவ்வழியே மாணவர்கள், மற்றும் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு சென்ற அரசு பேருந்து நீண்ட நேரமாக செல்ல முடியாமல் பாதி வழியிலேயே நின்றது. யானைகள் நடமாட்டத்தால் பயணிகளும், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர்... யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பிறகு வாகனங்கள் புறப்பட்டன... பகல் நேரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை உபயோகப்படுத்த கூடாது எனவும், கவனமுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.