காணாமல் போன நகை, பணம்.. காட்டி கொடுத்த 3வது கண்.. போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2024-08-11 04:09 GMT

கடலூர் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தவறவிடப்பட்ட மூன்றரை பவுன் தங்க நகைகள், 60 ஆயிரம் பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தனது கையில் வைத்திருந்த நகை, மற்றும் பணப்பையைத் தவற விட்டார். இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பையை எடுத்துச் சென்ற நபரை அடையாளம் கண்டு அவரிடமிருந்து மீட்டனர். பின்னர் அதை ஜோதியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்