சென்னையில் இளம் ஆசிரியையை வீட்டிற்கு அழைத்து உடல் முழுதும் கடித்து வைத்த `HM' - நடந்தது என்ன?

Update: 2024-10-30 14:23 GMT

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சங்கீதா என்பவர்,

22 வயதான இளம் ஆசிரியை ஒருவரை, அரையாண்டு தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி வீட்டுக்கு அழைத்துள்ளார். இதை நம்பி அந்த இளம் ஆசிரியை அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு குளிர் பானம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் விழித்துப் பார்த்தபோது உடல் முழுவதும் கடி பட்ட காயங்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, மொபைல் போன் மூலம் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் விரைந்து வந்து அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள்னர். அந்த தலைமை ஆசிரியை முன் பிணையில் விட்டதாக கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்