தீபாவளி கொண்டாட முடியுமா?.. முடியாதா?.. இடி, மின்னலுடன் வரும் கனமழை - பறந்த வார்னிங்

Update: 2024-10-30 14:18 GMT

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 1 மற்றும் 2ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 1ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 2ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை மற்றும் விருதுநகரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்