சென்னையின் உயிர்நாடியாக திகழும் ரயில்கள் ரத்து -"வாங்குற சம்பளத்துல பாதி போகுது" -குமுறும் பயணிகள்
தாம்பரத்தில் நடைபெறும் ரயில்வே பணிகளுக்காக, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எனினும் பயணிகளின் வசதிக்காக 44 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாது என, செங்கல்பட்டு பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் கூட்டம் அதிகரிக்கும் என்றும், சம்பளப்பணம் முழுவதும் பேருந்துக்கே செலவாகி விடும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.