புனித பயணத்திற்கு அழைத்து செல்வதாக கூறி... ஆட்டையை போட்டமோசடி மன்னன்

Update: 2024-09-07 10:26 GMT

காரைக்காலில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் நைனா முகமது. இவர் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை.. ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்திற்கு அழைத்து செல்வதாக கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சொன்னபடி அழைத்துச் செல்லாமல் நைனா முகமது ஏமாற்றியதாக குற்றம் சுமத்திய மக்கள், கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி கொடுக்குமாரு போலீசில் புகாரளித்திருந்தனர். இதனிடையே, நைனா முகமதுவின் டிராவல்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு பணம் கொடுத்தவர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்களிடம் நைனா முகமது தகாத முறையில் பேசிய செல்போன் ஆடியோ வெளியான விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், விசாரணையை கையிலெடுத்திருக்கும் போலீசார், முதற்கட்டமாக இந்த சுமார் 25 லட்ச ரூபாயை நைனா முகமது மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, வழக்குபதிவு செய்த போலீசார், சென்னையில் தலைமறைவாக இருந்த நைனா முகமதுவை கைது செய்து காரைக்காலுக்கு அழைத்து வந்திருக்கும் நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்