`அமேசான் பார்சலில் நாகப்பாம்பு' - ஆர்டர் செய்தவருக்கு பேரதிர்ச்சி... - Just MISS-ல் தப்பிய உயிர்

Update: 2024-06-19 09:30 GMT

சர்ஜாபூரைச் சேர்ந்த தான்வி என்ற பெண் ஆன்லைனில் கேம் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளார்... ஆர்டரை டெலிவரி செய்பவர் நேரே அந்த பார்சலை தான்வியின் கையிலேயே கொடுத்துள்ளார்... கேம் கன்ட்ரோலரை எடுக்க பார்சலைப் பிரித்த போது சட்டென தலைதூக்கியுள்ளது கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு... நல்ல வேளையாக பார்சலில் ஒட்டப்பட்டிருந்த டேப்பில் பாம்பு சிக்கியதால் தான்வி உயிர் தப்பினார்... இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது... சம்பந்தப்பட்டவருக்கு உரிய பணம் மீண்டும் கொடுக்கப்பட்டு விட்டாலும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் என்ன ஆவது என்ற அச்சம் எழுந்துள்ளது... இந்நிலையில் தான்வியிடம் மன்னிப்பு கோரிய சம்பந்தப்பட்ட நிறுவனம் தேவையான உதவிகள் செய்வதாகக் கூறியுள்ளது. ஆனால் தான்வி சட்ட ரீதியாக இவ்விவகாரத்தைக் கையாள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்