மாமியாருடன் தகாத உறவில் இருந்த நபர் - செப்டிங் டேங்க்கில் கதையை முடித்த மருமகன்

Update: 2024-07-28 16:15 GMT

தஞ்சை மாவட்டம் திருவோணம் பத்துக்காடு விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன குழந்தை. திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், பக்கத்து தெருவை சேர்ந்த பாத்திமா என்பவருடன் சின்ன குழந்தை தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பாத்திமாவுக்கு ஏற்கனவே திருமணமானதும், அண்மையில் தன் மகளை அவர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, கழுத்தில் ஐந்தரை சவரன் நகை மற்றும் கையில் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடனும் வெளியூர் செல்வதாக கூறிச் சென்ற சின்ன குழந்தையை காணவில்லை எனக் கூறி அவரது மனைவி போலீசில் புகாரளித்திருக்கிறார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாமியாருடன் தகாத உறவில் இருந்து வந்த ஆத்திரத்தில், சின்னகுழந்தையை பாத்திமாவின் மருமகனான விஜயகுமார் கொன்று, உடலை செப்டிங் டேங்க்கில் வீசியது தெரியவந்திருக்கிறது. உடனே, சின்ன குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்