தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனிதநேயம் அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமி கலந்து கொண்டு பேசினார். அவர், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தும் முதல் முயற்சியாக பார் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவில் மதுவால் 32 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மீதமுள்ள 68 சதவீதம் பேரை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் கூறினார். மது குடிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பெர்மிட் அளித்து, மதுவை விற்றால், 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த விடலாம் என்றும் அவர் கூறினார்.