வழக்கறிஞர் டிரெஸ்ஸில் ரவுடிகள்..? - தௌலத்தாக போலீசையே மிரட்டி செய்த காரியம்

Update: 2024-07-29 10:16 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, வழக்கறிஞர் எனக்கூறிக் கொண்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை மிரட்டிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதான இளைஞர்கள், தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலையில் போலீசாரின் சோதனைக்கு நிற்காமல் காவலர்களுக்கு மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, மதுபோதையில் பைக்கை இயக்கி, அடுத்தடுத்த சோதனை சாவடிகளில் நிற்காமல் போலீசாருக்கு போக்கு காட்டி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியாக ஆலங்குளம் அடுத்த மாறாந்தையில் உள்ள சோதனைச் சாவடியில் இருவரும் சிக்கி இருக்கின்றனர். இருவரும் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி மற்றும் ராமையா என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி இருக்கும் நிலையில், காவல்நிலையம் அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்