கோயிலில் தீபம் ஏற்றிய மறுநொடி துடித்து பலியான நபர்

Update: 2024-08-07 11:51 GMT

உத்தம்பாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியை சேர்ந்தவர் சின்னன். கூலித் தொழிலாளியான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரனுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆனைமலையன்பட்டியில் உள்ள கோயிலுக்கு சின்னன் சாமி தரிசனம் செய்ய சென்றபோது இந்த விபரீதம் அரங்கேறி இருக்கிறது. கோயிலுக்கு பைக்கில் சென்ற அவர், கையில் பெட்ரோல் கேன் ஒன்றுடன் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், கோயிலில் தீபம் ஏற்றி வழிபட்ட சின்னன், அருகில் தான் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில், தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்