தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே அத்தியாவசியப் பொருள்கள் லாரியில் ஏற்றப்படுவதையும், பொதுவிநியோகத் திட்டப்பொருட்களை நகர்வு செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரி பார்க்கக்கூடிய மின்னணு தராசு இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் பொருட்களை இறக்கும்போது பொருட்கள் மறு எடையிட்டு பணியாளர்களிடம் ஒப்புதல் பெறப்படுகிறது என்பதையும் உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.