வீசப்போகுது வெப்ப அலை...மக்களே உஷார்...அடுத்த 5 தினங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்
- தமிழகத்தில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- அடுத்த 5 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும்
- கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது என்றும்
- ஈரோட்டில் அதிகபட்சமாக 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் 30 மற்றும் மே 1ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.