"குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு"- பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு | Child Marriage | TN Govt
வரும் 16ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் வழிபாட்டு கூட்டத்தில், குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு என்ற பெயரில் உறுதிமொழி் ஏற்க, பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரிய வந்தால் அதனை தடுத்து நிறுத்துவேன் என உறுதி மொழி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என உறுதி மொழி எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது