பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - கன்னியாகுமரியில் பதற்றம்

Update: 2024-01-13 02:17 GMT

குளச்சலை அடுத்த புதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஜஸ்டிலின் கண்ணன் என்பவருக்கும், அதே கட்சியில் நிர்வாகியாக உள்ள சகாயம் என்பவருக்கும் இடையே, தேவாலய விழாவில் நடந்த சம்பவத்தில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஜஸ்டிலின் கண்ணன் கருங்கலை அடுத்த பாரியக்கல் கடற்கரைக்கு தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, அவரை 3 பேர் கொண்ட மர்மகும்பல் வழிமறித்து அரிவாளால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குமூலம் அடிப்படையில், சகாயம் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்