சென்னைக்கு என்ட்ரி கொடுத்த பன்றி காய்ச்சல்... ஒருவர் பலி.. ‘மாஸ்க்’ அவசியம்.. பரபர ஆர்டர்!
வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த ரவிக்குமார் என்பவருக்கு, 15 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நிலைமை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்று இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ரவிக்குமாரின் வீடு அமைந்துள்ள பகுதியில் பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் முக கவசங்கள் வழங்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவர் நடத்தி வந்த கடையை 5 நாட்களுக்கு மூடி வைக்குமாறு நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இருந்து வந்த ரவிக்குமாரின் உடலை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட 15 அடி ஆழ குழியில் ரவிக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று நகராட்சி மற்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது