"கங்குவா படத்தை பார்த்து மெய்சிலிர்த்தேன்.."/"சூர்யாவின் நடப்பு உச்சம்"- புகழ்ந்து தள்ளிய பாடலாசிரியர்

Update: 2024-07-01 18:10 GMT

கங்குவா படத்தை பார்த்து மெய்சிலிர்த்து விட்டதாக, படத்திற்கு முதல் ரிவ்யூ கொடுத்துள்ளார் பாடலாசிரியர் விவேகா. சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா படானி, அனிமல் பட வில்லன் நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கங்குவா படத்தை பார்த்து மெய் சிலிர்த்ததாக தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேகா. மேலும் இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரமாண்டம் என குறிப்பிட்ட அவர், இயக்குநர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்வதாகவும், சூர்யா சாரின் நடிப்பு உச்சம் எனவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்