பெண் சர்வேயரின் கிரிமினல் மைண்ட்.. அதிர்ச்சி வாக்குமூலம்.. நடுக்கத்தில் அரசியல் திமிங்கலங்கள்
கோவில்பத்து கிராமத்தில் உள்ள பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் அளித்த புகாரின் பேரில், தனிப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில், வீட்டுமனைகளை விற்பனை செய்த சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஜே.சி.பி. ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பாய்ந்தது. தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில்,
காரைக்கால் நகராட்சி அரசு நில சர்வேயர் ரேணுகாதேவி நில விற்பனைக்கு திட்டம் போட்டு கொடுத்ததும், இதற்காக பல லட்சங்களை பெற்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். மோசடியில் அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக ரேணுகாதேவி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள் என சுமார் 21 பேர் மீது போலீசாரின் விசாரணை வளையம் நீண்டுள்ளது.