அமைச்சர்கள் விவகாரத்தில் அதிரடி திருப்பம் "தடை"- அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-09-13 15:04 GMT

2006 திமுக ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மீதும், அவரின் மனைவி மீதும், வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சொத்து குவித்ததாக 2012இல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக

இருந்த கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதும், அவரின் மனைவி மீதும், 44 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக வழக்கு பதிவானது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், இடைக்கால தடை

கோரியும் சண்முக மூர்த்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். மேல் முறையீடு மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், அதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது

Tags:    

மேலும் செய்திகள்