மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டம்.. எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு.. கோர்ட் எடுத்த திடீர் முடிவு
புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், இந்த சட்டங்களுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த சிவஞானசம்பந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு என்ன தலையீட்டு உரிமை உள்ளது என்று கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.