சூறாவளி.. தமிழகத்திற்கு திடீர் கனமழை அலர்ட்.. சென்னைக்கு மட்டும் அதிர்ச்சி வானிலை

Update: 2024-04-12 09:09 GMT

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்... கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரம், தெற்கு கேரள கடலோரம் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்