- உசிலம்பட்டி அருகே விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரணன் என்பவரது விவசாய நிலத்தில் சுமார் 6 அடி ஆழ பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
- இந்த பகுதி பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்ட புத்தூர் மலை அடிவார பகுதி என்பதால், இவை பழங்கால சேமிப்பு கிடங்கு அல்லது பதுங்கு குழிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எனவே இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.