மீண்டும் போராட்டம் வெடித்தது...3 மணி நேரம் அவசர ஆலோசனை கூட்டம்

Update: 2024-08-04 08:43 GMT

வங்கதேசத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளதால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா

நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார். வங்கதேச

விடுதலை போரில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு

அரசு வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க

கோரி அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் நேற்று டாக்காவில்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவகள் பேச்சுவார்த்தைக்கு

மறுத்த நிலையில் பல்கலக்கழக துறை தலைவர்கள் மற்றும்

மூத்த ஆசிரியர்களுடன் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா

நேற்றிரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்