அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் 108 சங்கு பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார் தோப்பு ராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கலச பூஜை, மகா சுதர்சன ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் 108 சங்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னர், பகல் 12 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், 1:30 மணிக்கு உச்சி கால சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.