திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறு பரப்பிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூரை சேர்ந்த பாஜக நிர்வாகியான ஆட்டோ சீனி என்கிற சீனிவாசன் என்பவர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து, வாட்ஸ் அப்பில் அவதூறாக பதிவிட்டார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.