"15 ஆயிரம் கிராம் நகை போலியா?" சிபிஐ விசாரணை வேண்டும் வங்கிக்கு எதிராக கொதித்து எழும் உரிமையாளர்

Update: 2024-05-17 06:37 GMT

சிவகாசி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கிக்கு எதிரே பாலசுந்தரம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், மறு விற்பனைக்கு வரும் நகைகளை வாங்கி, எதிரே உள்ள வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று 56 வாடிக்கையாளர்களின் பெயரில், 15 ஆயிரத்து 427 கிராம் நகைகளைஅடகு வைத்து சுமார் 7 கோடியே 55 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பாலசுந்தரமும், நகை மதிப்பீட்டாளர் முத்துமணியும் சேர்ந்து, போலி நகைகளை வைத்து மோசடி செய்ததாக, வங்கியின் நெல்லை பிராந்திய மேலாளர் ரஞ்சித் என்பவர், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த புகாருக்கு பாலசுந்தரமும், முத்துமணியும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடன் தொகையை திருப்பிச் செலுத்திய பிறகும், நகையைத் திருப்பித் தராமலும், நகை மதிப்பீட்டு அறிக்கையை காண்பிக்காமலும் வங்கி நிர்வாகம் அலைக்கழிப்பதாக பாலசுந்தரம் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐ தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று நகை மதிப்பீட்டாளர் முத்துமணி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்