சிவகங்கை நகரில் தனியார் உணவகத்தில் இருந்த பிரியாணியில் சரியாக வேக வைக்காத இறைச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த உணவகத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சரியாக வேகவைக்காத மற்றும் ரசாயன நிறமேற்றப்பட்ட இறைச்சி இருப்பதை கண்டறிந்து, அவற்றை குப்பையில் கொட்டினர். மேலும், உணவகத்திற்கான சான்றிதழ் காட்சிபடுத்தாமை, சுகாதாரமற்ற சமையலறை ஆகியவற்றை சரி செய்ய அறிவுறுத்திய அதிகாரிகள், மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.