மாமனை விரட்டும் முறைப் பெண்கள் ஊரே ஓடி பிடித்து விளையாடும் பாச விழா - 156 வருசமா இப்படிதான் இவங்க!!
மாமனை விரட்டும் முறைப் பெண்கள்
ஊரே ஓடி பிடித்து விளையாடும் பாச விழா
பார்த்தாலே பொறாமை பட வைக்கும் மக்கள்
156 வருசமா இப்படிதான் இவங்க!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 156வது ஆண்டாக ஊர் மக்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் பழமை மாறாமல் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து திருவிழாக்களைக் கொண்டாடுவதெல்லாம் அத்திபூத்தாற்போல் அரிதாகி விட்டது...
ஆனால் இங்கே ஒரு ஊர்...10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் அல்ல...156 ஆண்டுகளாக மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழாவை வருடம் தவறாது விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை... கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா கோலாகலமாக கடந்த வாரம் துவங்கியது...
3 நாள்களாக ஏராளமன பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம்...பறவைக்காவடி...ஏந்தி...அலகு குத்தி...பூக்குழி இறங்கி...அம்மனுக்குப் பொங்கல் வைத்து...முளைப்பாரி தூக்கி...முக்கிய வீதிகளில் வலம் வந்து...அலங்கார குளத்தில் கரைத்து அம்மனை தரிசித்தனர்...
அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாதான் முக்கியமான விழா...
அம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்தும்...தெருக்களில் திருவிழா களைகட்டத் துவங்கி விடும்...
மாமன்...மச்சான்கள் மீது பெண்களும்...முறைப் பெண்கள் மீது ஆண்களும்...மாற்றி மாற்றி...மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்ந்தனர்...
உறவுகள் மீது உற்சாகமாக மஞ்சள் நீர் ஊற்றி...துள்ளிக் குதித்து...ஊர் மக்கள் விளையாடி மகிழ்ந்தனர்...
ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது...வீடுக்குள்ளே ஓடி ஒளிந்தாலும்...தேடிப்பிடித்து...மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது தான் நம் ஸ்டைல்...
கொஞ்சம் கொஞ்சமாக எந்திரமயமாகும் நம் வாழ்வை கொஞ்சமாவது உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவது திருவிழாக்கள் மட்டுமே என்பதில் சந்தேகமில்லை...