சிவகங்கை அருகே, நெடுஞ்சாலை அமைக்க பட்டா நிலத்தில் இருந்த வீடுகளை இடித்து விட்டு, மாற்று இடம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி நரிக்குறவர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பையூர் பழமலை நகரில், பட்டா இடத்தில் இருந்த பத்து வீடுகளும், ஒரு கோயிலும் சாலை அமைப்பதற்காக இடிக்கப்பட்டன. அதற்கு ஈடாக மாற்று இடம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரை நரிக்குறவர் இன மக்கள், கடந்த மே மாதம் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, மாற்று இடம் கொடுப்பதாக ஆட்சியர் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால், இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறி, நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.