IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு - Ex சிறப்பு DGP-யின் கோரிக்கை மனு.. உயர்நீதிமன்றம் உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு, ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்