சென்னையில் டோக்கன்களை வைத்து ஹவாலா பண பரிமாற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இறங்கிய போலீசார், துபாயிலிருந்து டோக்கன் நம்பர் பெற்றுக் கொண்டு, சவுகார்பேட்டை பகுதியில் உள்ள ஏஜெண்டிடம் பணத்தை மாற்ற முயன்ற இருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், பரத் மற்றும் பட்டேல் ஆகிய இருவரும், குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது