ஜூன் 6ல் பள்ளிகள் திறந்ததும் அன்றே.. தமிழகம் முழுவதும் பறந்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் உள்பட பல்வேறு உதவிகள் நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது என்றும், இதற்காக ஆதார் எண்கள் இணைப்பது அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே வெளியான அரசாணையை பின்பற்றி அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் புதிதாக ஆதார் எண்களை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும், புதுப்பிக்க செய்யவும் ஏதுவாக பள்ளி திறக்கப்படும் ஜூன் 6ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளைக் கொண்டு , இந்த முகாம்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.