அன்று நாடே அதிர்ந்த மெகா ஸ்கெட்ச் நெல்லையில் புது அவதாரத்தில் `சலபதி’ 22 ஆண்டு மர்மம்...விரட்டி பிடித்த சிபிஐ

Update: 2024-08-06 10:13 GMT

ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் 50 லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டு பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்தவரை 22 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையில் வைத்து சிபிஐ போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர் சலபதி ராவ். இவர் எலக்ட்ரானிக் நிறுவனங்களின் பெயரில் போலியான சம்பள பட்டியல் தயார் செய்து, 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2002 ஆம் ஆண்டே வழக்குபதிவு செய்த மத்திய புலனாய்வு துறையினர், கடந்த 2004 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்தனர். இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு முதல் சலபதி ராவை காணவில்லை எனக்கூறிய அவரது மனைவி, தனது கணவர் மாயமாகி 7 ஆண்டுகள் ஆனதால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்க வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கடந்த 2014 இல் சலபதிராவை தேடப்படும் குற்றவாளியை அறிவித்த சிபிஐ, சலபதிராவின் சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சலபதிராவின் மனைவி சிபிஐக்கு எதிராக தடையாணையும் பெற்றார். இந்த சூழலில், சலபதிராவை தொடர்ந்து 22 ஆண்டுகள் தேடி வந்த சிபிஐ, நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூரில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை கைது செய்திருக்கின்றனர். சேலத்தை சேர்ந்த பெண் ஒருவரை 2 ஆம் திருமணம் செய்து, தனது பெயரை வினித்குமார் என மாற்றி ஆதார் கார்டு பெற்று, சலபதி ராவ் நெல்லையில் பதுங்கி இருந்தது தெரியவர அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்