சவுக்கு சங்கர் மீதான தொடர் நடவடிக்கைகள் ஊடகத் துறையினருக்கான அச்சுறுத்தல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களையும் அடக்குமுறைகளையும் கடந்து, பத்திரிக்கை மற்றும் நாளிதழ்கள் செயல்பட்டதுதான் நாடு சுதந்திரம் காண்பதற்கு முக்கியமாய் அமைந்தது என குறிப்பிட்டுள்ளார். தற்போது கருத்து சுதந்திரத்தை முடக்கி, மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.