வெளியானது +2 ரிசல்ட்.. அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

Update: 2024-05-06 11:58 GMT

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள், 20-ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய‌பிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். ஊட்டி, தென்காசி உள்ளிட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேமராக்கள் பழுது தொடர்பாக, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதீத வெப்பத்தால், மின் இணைப்பு பிரச்சனைகளால் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாக கூடாது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சாகு தெரிவித்தார். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சான்றிதழ் வழங்கும் பணியில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்