கோயிலில் காணாமல் போன ஒன்றரை வயது பெண் குழந்தை.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார் | Samayapuram

Update: 2024-03-30 02:23 GMT

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கௌதமி என்பவர், தனது குழந்தைகள் மற்றும் சகோதரி முத்துலெட்சுமியுடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அப்போது, இரண்டு குழந்தைகளை சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு, கழிப்பறை சென்றுள்ளார். இந்த நிலையில் முத்துலெட்சுமி அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஒன்றைரை வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், கோயில் அருகே சந்தேகமான முறையில் குழந்தையுடன் நடந்து சென்ற தஞ்சாவூரை சேர்ந்த நீலாவதி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. பின்னர் குழந்தையை மீட்ட போலீசார், நீலாவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்