சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த செல்வம் என்ற விசைத்தறி கூலி தொழிலாளியின் மகள் ராவணி பொறியியல் பட்டபடிப்பிற்கு விண்ணப்பித்து தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ராவணி கூறினார்.