துணிகளை சாக்கடையில் வீசி... கடையை அகற்றிய போலீசார் கதறிய தொழிலாளி... பரபரப்பு காட்சி

Update: 2024-08-28 14:06 GMT

சேலத்தில் உள்ள நாராயண பிள்ளை தெருவில், வெங்கடாசலம் என்பவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி சலவை கடை வைத்துள்ளார். இந்நிலையில், சேலம் மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன், வெங்கடாசலத்தின் தள்ளுவண்டி கடையில் உள்ள துணிகளை அகற்றி சாக்கடையில் வீசிவிட்டு, வண்டியை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பின்பு கண்ணீர்மல்க பேசிய வெங்கடாசலம், தனிநபர் ஒருவர் தூண்டுதலின் பெயரில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தள்ளுவண்டி தூக்கிச் செல்லப்பட்டதாகவும், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்