சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் மீது குற்றவியல் வழக்கு தொடர புகார் மனு அளிக்க பட்டு உள்ளது.
பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததை எதிர்த்து, தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் தொழிலாளர் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் பணி நீக்கம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதர் ஆகியோர் மீது குற்றவியல்
வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, இவர்கள் இருவர் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சேலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர புகார் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.