ரவுடிகள் செயலால் பரபரப்பு.. அதிர்ந்த சேலம்

Update: 2024-05-13 15:47 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரவுடிகள் ஒருவர் வீட்டின் மீது ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய தாக்குதல் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒமலூர் அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வமும், பொட்டியபுரத்தைச் சேர்ந்த ரவுடி விஸ்வநாதனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து, பின்னர் எதிரிகளாக மாறியுள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் அழிக்க திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவுடி பன்னீர்செல்வம் வீட்டின் மீது, விஸ்வநாதன் தரப்பைச் சேர்ந்த 5 பேர், பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதேபோன்று, விஸ்வநாதன் வீட்டின் மீது, பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த 4 பேர் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால், கமலாபுரம், பொட்டியபுரம் கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், பன்னீர் செல்வம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும், விஸ்வநாதன் வீட்டின் மீது குண்டு வீசியதாக ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்