ஜவ்வரிசி தயாரிப்பில் கெமிக்கல்.. திடீர் சோதனையில் கிடைத்த அதிர்ச்சி.. சேலத்தில் 2 ஆலைகளுக்கு சீல்
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் பகுதியில் சாந்தி என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலையில் சேலம் சேகோ சர்வ் மேலாண்மை இயக்குனர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், நான் ஃபுட் கிரேட்(non food grade) சோடியம் ஹைப்போ குளோரைடு கெமிக்கல் 33 கேன்கள் கண்டறியப்பட்டன. இந்த ரசாயனம் ஜவ்வரிசி தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 16 ஆயிரத்து 200 கிலோ சேகோ, 10 ஆயிரத்து 800 கிலோ ஸ்டார்ச் மில்க், 5 ஆயிரத்து 400 கிலோ ஈர ஸ்டார்ச் மாவு, ஆயிரத்து 650 லிட்டர் சோடியம் ஹைப்போ குளோரைடு கெமிக்கல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 15 லட்சத்து 31 ஆயிரத்து 800 ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சேகோ ஆலைகள் மூடப்பட்டுள்ளன.